சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்ய முடிவு.?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்ய முடிவு.?


srh-player-afected-by-corona


ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சில வீரர்களுக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், திடீரென ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.   

முதலில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நடக்க வேண்டிய போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் சிலருக்கும், ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபில் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாகவும், விரைவில் புது தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியானது.

sunraishers

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் விருதிமான் சகாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு டெல்லியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோத இருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.