
முதல் ஆட்டத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் முகமது சிராஜ்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார். ஷமிக்கு மாற்று வீரராக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
A moment Mohammed Siraj will never forget - his first Test wicket! #OhWhatAFeeling @Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/1jfPJuidL4
— cricket.com.au (@cricketcomau) December 26, 2020
சமீபத்தில் அண்மையில் தனது தந்தையை இழந்த சிராஜ் அவரது இறுதி சடங்குகளுக்கு கூட செல்லாமல் ஆஸ்திரேலியாவிலேயே அணியுடன் இருந்து விட்டார். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடிய மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட் மற்றும் கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தி முதல் ஆட்டத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement