நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன் இந்திய அணியில் இடம்பெறுவாரா.? முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன.?
இந்த வருட ஐபிஎல் தொடரில் யார்க்கரில் புதிய சாதனையை படைத்துள்ளார் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியினரை மிரட்டி நடராஜனின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. யார்க்கர் மன்னன் பும்ரா, ரபடா மற்றும் சமி இவர்களை விட நடராஜன் இந்த தொடரில் அதிகமான யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார்.
ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் நடராஜன். சன்ரைசர்ஸ் அணியில் மார்ஷ், புவனேஷ்வர் குமார் காயமடைந்த நிலையில் டெத் ஓவர் போடும் பணியை நடராஜன் சிறப்பாக செய்து வருகிறார். நேற்று கடைசி ஓவர் வீசிய நடராஜன் வெறும் 7 ரன்கள்தான் கொடுத்தார். அதிலும் அவர் 6 பந்திலும் யார்க்கர் போட்டு அசத்தினார்.
நேற்று இவரது பந்து வீச்சை பார்த்த முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலர் நடராஜனை இந்திய அணியில் எடுக்க வேண்டும். பும்ராவையும் இவரையும் ஒன்றாக ஆட வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய பவுலிங் புதிய உச்சத்தை அடையும் என்று கூறியுள்ளனர். நடராஜனை இந்திய அணியில் எடுக்க பலர் கோரிக்கை வைத்துள்ளனர் .