விளையாட்டு

புள்ளி பட்டியலில் சென்னை அணிக்கு இந்த மோசமான இடம்தான் கிடைக்கும்!! முன்னாள் சிஎஸ்கே வீரர் போட்ட டிவிட்!! கொதிக்கும் ரசிகர்கள்.!!

Summary:

நடைபெற இருக்கும் ஐபில் போட்டிகளில் அணிகளின் புள்ளி பட்டியல் குறித்து சென்னை அணியின் முன்னா

நடைபெற இருக்கும் ஐபில் போட்டிகளில் அணிகளின் புள்ளி பட்டியல் குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ஒருவர் போட்ட ட்விட் சென்னை அணி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த முறை யார் கோப்பையை வெல்வார்? புள்ளி பட்டியல் நிலவரம் எப்படி இருக்கும் என ஆளாளுக்கு தற்போதில் இருந்தே தங்கள் கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டனர். அந்த வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். இவர், வரவிருக்கும் ஐபில் போட்டியில் 8 அணிகள் புள்ளிப் பட்டியலில் எந்த இடத்தை பிடிக்கும் என தனது கருத்தை கூறியுள்ளார்.

அதில், மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் இருக்கும் என கூறிய அவர், சென்னை அணிதான் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் என கூறியுள்ளார். கடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடியதை வைத்து, இப்படியா கூறுவீர்கள் என சென்னை அணி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை அணிக்காக விளையாடிய ஒருவரே சென்னை அணியை பற்றி இப்படி கணித்திருப்பது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement