பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்!

பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்!


scotland-cricket-player-died


ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கான் டி லாங். 38 வயது நிரம்பிய இவர் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்.  கடந்த 2015ல் அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்காக அறிமுகமானார் கான் டி லாங். பின்னர் கடந்த 2016ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

கடைசியாக இவர் கடந்த 2017ல் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். கடந்த வருடம் இவரின் மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்னை காரணமாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக அவதிப்பட்ட கான் டி லாங், கடந்த 18ஆம் தேதி உயிரிழந்ததாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

கான் டி லாங்கிற்கு கிளாரி என்ற மனைவியும் டெய்சி மற்றும் ரோரி என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கான் டி லாங் இறப்பிற்கு பல கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.