கண்ணு பட போகுது! ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு தோனி மலைப்பகுதியில் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இருக்கும் அழகிய தருணம்! சாக்ஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம்...!!!



sakshi-dhoni-38th-birthday-celebration

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி, தனது 38வது பிறந்தநாளை நேற்று (நவம்பர் 19) கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் தோனியுடன் மலைப்பகுதியில் நேரத்தை செலவிட்ட தருணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தோனியுடன் மலைப்பகுதியில் சுற்றுலா

வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை முதலில் பகிர்ந்த சாக்ஷி, தொடர்ந்து மலைப்பகுதியில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களையும் பதிவிட்டுள்ளார். மலைப்பாதையில் இயற்கையை ரசித்தபடி தோனி கார் ஓட்டும் வீடியோவை, அருகில் அமர்ந்திருந்த சாக்ஷி படம்பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி..! 140 கி.மீ வேகதில் பந்து வீசிய பவுன்சர்! உதட்டில் ரத்தக் காயத்துடன் மூளையதிர்ச்சி ஏற்பட்டு வெளியேறிய கேமரூன் கிரீன்...! ஷாக் வீடியோ...!!!

அவர் வெளியிட்ட மற்றொரு புகைப்படத்தில், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்த தோனியும், ஸ்வெட்டர் அணிந்த சாக்ஷியும் அருகருகே அமர்ந்திருப்பது இடம்பெற்றுள்ளது. மலைகளுக்கு மத்தியில் இருவரும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு

2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதன்மூலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அவர் விடைபெற்றுள்ளார்.

சிஎஸ்கே அணியில் புதிய பொறுப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற தோனி, இனி வரும் ஐபிஎல் 2027 தொடரில் அணியின் வழிகாட்டியாகச் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள மினி ஏலத்தில், சிஎஸ்கே அணிக்காக அவர் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரராக மைதானத்தில் தோனியை பார்க்க முடியாவிட்டாலும், அணியின் புதிய பொறுப்பில் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.