SAFF Championship 2023: குவைத் கால்பந்து அணியை தோற்கடித்து, SAFF 2023 கோப்பையை வென்ற இந்திய சிங்கங்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!



saff-championship-2023-india-victory-and-got-trophy

 

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இறுதி ஆட்டத்திற்கு இந்தியா - குவைத் அணிகள் தேர்வாகின. இன்று இரண்டு அணிகளும் பெங்களூரில் உள்ள மைதானத்தில் வைத்து பலபரீட்சை நடத்தியது. 

இந்த ஆட்டத்தில் குவைத் அணியை தோல்வியுற செய்த இந்திய அணி அபார வெற்றி அடைந்தது. 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலை ஆனதால், பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதனையடுத்து, பெனால்டியில் இந்திய அணி 5 புள்ளிகளை பெற்றது, குவைத் அணி 1 புள்ளிகளை தவறவிட்டு 4 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதனால் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் சார்பில் விளையாடிய சுனில் சேத்ரி 5 புள்ளிகளையும் விடாமல் குவித்து வெற்றிக்கு வழிவகை செய்தார்.