
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வ
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களுக்காக வருத்தப்படுகிறேன்.
அதில் ஒன்று, சுனில் கவாஸ்கருடன் இணைந்து நான் ஒரு போதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர் தான் எனது பேட்டிங் ஹீரோ. நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்று விட்டார். இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆடவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு.
எனக்குள் இருக்கும் இன்னொரு வருத்தம் என்னவென்றால் எனது சிறுவயது நாயகன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனது தான். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்னும் உள்ளது.
இத்தனைக்கும் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து தான் விவியன் ரிச்சர்ட்ஸ் ஓய்வு பெற்றார். ஆனால் சில ஆண்டுகள் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாததால் அவரை களத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டது என சச்சின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement