சினிமா விளையாட்டு

83 படத்தில் தன்னைப் போன்று நடித்த சிறுவன் குறித்து சச்சின் போட்ட ட்விட்டர் பதிவு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!!

Summary:

83 படத்தில் தன்னைப் போன்று நடித்த சிறுவன் குறித்து சச்சின் போட்ட ட்விட்டர் பதிவு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!!


நடிகர் ரன்வீர் சிங்கின் ’83’ படத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றதை அடிப்படையாக கொண்டு உருவான 83 படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ்வாகவும், அவரின் மனைவி ரோமியா பாடியா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்துள்ளார்.

இந்தியா கோப்பை வென்ற இந்த வரலாற்றுத் தருணத்தை மிக தத்ரூபமாக எடுத்திருப்பதாக கூறி இந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் சிறுவனாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்து மகிழ்வதாக காட்டப்பட்டிருக்கும். 

இது குறித்து சச்சின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரன்வீர் சிங்கின் 83 படத்தில் வரலாற்று தருணத்தை எல்லா கோணங்களிலும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதன்முறையாக உலக கோப்பை வென்ற தருணத்தை கபில் தேவ் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார். அந்த சிறுவனுக்கு இந்த வெற்றி மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்பது எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement