பென் ஸ்டோக்ஸை பாராட்ட சச்சினை தரம் தாழ்த்திய ஐசிசி! கொதித்தெழும் ரசிகர்கள்

பென் ஸ்டோக்ஸை பாராட்ட சச்சினை தரம் தாழ்த்திய ஐசிசி! கொதித்தெழும் ரசிகர்கள்


Sachin fans roast icc for a post

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை "எந்த காலத்திலும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்" என கூறி சச்சின் அவருடன் உள்ளார் என பதிவிட்டுள்ளது சச்சினின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 84 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமானார். அதேபோல் நடந்து முடிந்த ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனி ஆளாய் நின்று சதமடித்து இங்கிலாந்து அணியை வெற்றிபெற செய்தார். 

Sachin tendulkar

இதனால் ஐசிசி அவரை பாராட்டும் விதமாக ஏற்கனவே உலகக்கோப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றை உண்மை என ஏற்கும் வகையில் மீண்டும் பதிவு செய்துள்ளது. அந்த பதிவில் "எந்த காலத்திலும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் உடன் சச்சின் உள்ளார்" என்று எழுதி சச்சின் பென் ஸ்டோக்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்தனர். 

இதன் மூலம் பல சாதனைகளை படைத்த சச்சினினை விட ஸ்டோக்ஸ் தான் சிறந்தவர் என கூறி சச்சினின் போட்டோவையே வைத்து பதிவிட்டுள்ளதால் சச்சினின் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சினின் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.