இலங்கைக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் இல்லை.! ஆனால் தோனி கற்று கொடுத்த வித்தை இருக்கு.! இளம் வீரர் ஓப்பன் டாக்.!

இலங்கைக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் இல்லை.! ஆனால் தோனி கற்று கொடுத்த வித்தை இருக்கு.! இளம் வீரர் ஓப்பன் டாக்.!


ruthraj talk about ms dhoni

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.  இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான மூத்த வீரர்கள் கொண்ட இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்ககேற்கச் சென்றுள்ளது.

இதனால் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் சர்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடிய போது ருத்துராஜ் கெய்க்வாட் தோனியுடன் நெருக்கமாக பழகி பல கிரிக்கெட் விஷயங்களை கற்று கொண்டிருக்கிறார்.

MS Dhoni

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள ருத்துராஜ், தோனி எனக்கு பெரிதும் உதவியுள்ளார். தொடக்கத்தில் ஐபிஎல் களத்தில் நான் ரன் சேர்க்க தவறியபோது என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். அதனால் நான் உறுதியுடன் ஆட்டத்தை அணுகினேன். அதன் மூலம் ரன்களும் சேர்த்தேன். அவர் கொடுத்த ஆலோசனைகள் இலங்கைக்கு எதிரான தொடரில் உதவும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.