விளையாட்டு

பாலியல் புகாரால் 1 பில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்ததை இழக்கும் உலக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!.

Summary:

பாலியல் புகாரால் 1 பில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்ததை இழக்கும் உலக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!.


கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ,சுமார் ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் பெருமளவான விளம்பரங்களை அவர் இழக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது தனித்துவமான திறமையாலும், கடின உழைப்பாலும் சுமார் 350 மில்லியன் பவுண்ட்ஸ் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார்.

அமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து வீரர் ரொனால்டோ தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும், அதனை மறைக்க ரூ. 3 கோடி வரை தன்னிடம் பேரம் பேசியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

அவர் அளித்த புகாருக்கு ரொனால்டோ மறுப்பு தெரிவித்ததோடு, இது பொய்யான குற்றச்சாட்டு எனவும், தனது நற்பெயரை கெடுப்பதற்காகவே இது போன்று  அவர் கூறிவருகிறார் என ரொனால்டோ கூறினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போர்த்துக்கல் அணி வீரர்களுக்கான பட்டியலில் ரொனால்டோவின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் கால்பந்து ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போர்ச்சுகல் அணி இந்த மாதம் 11-ம் தேதி துவங்கி போலந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் ரொனால்டோவின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளதாக பகிர்ந்து வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் ரொனால்டோ விளம்பர தூதுவராக இருக்கும் நிறுவனங்களும் அவரை கைவிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement