நம் தேசத்திற்காக நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா செய்த உதவி! ரோஹித் என்ன கூறியுள்ளார்.?

நம் தேசத்திற்காக நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா செய்த உதவி! ரோஹித் என்ன கூறியுள்ளார்.?


rohith give corona rilef fund

சீனாவில் ஆரம்பித்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இதுவரை இந்தியாவில் 1,251 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தாராளமாக நிதி  வழங்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தநிலையில் நாட்டில் பல பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதியை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவ இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 75லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில முதல்வர்களும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக ரோகித்சர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில், "நம் நாடு மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நம் நாட்டிற்காக எனது பங்காக ரூ.75 லட்சத்தை அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.