விளையாட்டு

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து புதிய மைல்கல்லை எட்டிய ரோகித் சர்மா!

Summary:

Rohit sharma registered his first double century

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார் ரோகித் சர்மா. 

ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 58 ஓவர்களகல் நிறுத்தப்பட்டது. 

முதல் நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 117, ரஹானே 83 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் துவங்கியது.

நேற்று போலவே இன்றும் அதிரடியை காட்ட துவங்கினர் ரோகித் மற்றும் ரஹானே. சிறப்பாக ஆடிய ரஹானே தனது 11 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 115 ரன்கள் எடுத்த அவர் லின்டே பந்தில் ஆட்டமிழந்தார். 

தொடரந்து அதிரடியாக ஆடி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 212 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜா மற்றும் சாஹா களதத்தில் உள்ளனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement