முதல் இந்தியராக நாளைய T-20 போட்டியில் களமிறங்கவுள்ள ரோஹித் சர்மா!

rohit sharma is first indian T20 player


rohit sharma is first indian T20 player


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டி20  போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் விளையாடியதின் மூலம் அதிகபடியான சர்வதேச டி-20 போட்டியை விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T-20 போட்டி, நாளை ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. இது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்கும் 100வது சர்வதேச T-20 போட்டியாகும். இதன் மூலம் 100 T-20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெறவுள்ளார் ரோஹித் சர்மா.

Rohit sharma

மேலும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஆனால் விராட் கோலியின் டி-20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த சாதனையை முறியடித்து சர்வதேச டி-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.