ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ஒரு கேப்டனே இப்படி செய்யலாமா.? அதிலும் ரோகித் சர்மாவா இப்டி செய்யுறது... வைரல் வீடியோ
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்த காமெடி செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஜடேஜா வீசிய பந்தினை சில்வா எதிர்கொண்டார். அப்போது பந்து பேடில் பட உடனடியாக இந்திய வீரார்கள் அவுட் என அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார்.
Recreated 🤣🤣 #RohitSharma #IndvsSl #Beast #MumbaiIndians @ImRo45 @mipaltan @MumbaiIndiansTN @Ro_TNpage45 pic.twitter.com/kGm5Ugwo5L
— Fan boy of Vijay anna (@Mahi_vijay22) March 14, 2022
அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிஆர்எஸ் கேட்பது போல சென்று கையைத் தூக்கினார். ஆனால் அப்படியே திரும்பி சிரித்துக் கொண்டே கையை தலையில் தடவிக்கொண்டு நடந்து சென்றார். ரோஹித் சர்மா கையை தூக்கியதும், அவர் டிஆர்எஸ் கேட்க போகிறார் என நினைத்துள்ளனர். ஆனால் ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே சென்றார். இந்த வீடியோவை பலரும் காமெடியாக பகிர்ந்து வருகின்றனர்.