தோனியின் இந்த வாழ்க்கைக்கு காரணம் இந்த பிரபல கிரிக்கெட் வீரர்தானாம்! நன்றி கூறிய தோணி மனைவி!
தோணி: இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மாபெரும் சக்தி. இந்திய அணியின் கேப்டன்களில் அதிக வெற்றியையும், கோப்பைகளையும் இந்திய அணிக்காக வாங்கி கொடுத்தவர். இவர் தலைமையில் T20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, ஆசியா கோப்பை என அனைத்தையும் இந்தியாவிற்கா வாங்கிக்கொடுத்தவர் தல தோணி.
கிரிக்கெட் பற்றி தெரிந்தவர்களுக்கு நிச்சம் தல தோணி பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இவரது வாழக்கை வரலாறை மையமாக கொண்டு படம் கூட எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை பார்த்தவர்களுக்கு நிச்சயம் தோனியின் முழு வாழ்க்கை பற்றியும் தெரிந்திருக்கும்.
முதலில் தோணி ஒரு பெண்ணை காதலிக்க அந்த பெண் ஒரு விபத்தில் மரணமடைந்து விடுகிறார்.பின்னர் தற்போதைய மனைவி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்துள்ளார் தோணி. இந்நிலையில் தோனி மனைவி சாக்ஷி கடந்த 19 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் ஷாக்ஷியின் நெருங்கிய நண்பர்களும் பங்குபெற்றிருந்தனர்.
இந்த பிறந்தநாள் விழாவில் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் தங்களது மனைவியோடு வந்திருந்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் நானும், தோனியும் சேர்ந்ததற்கு ராபின் உத்தப்பாதான் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார் சாக்ஷி .