விளையாட்டு

சிறந்த வழிகாட்டி தோனி தான்! அடுத்த தோனி என கூறப்பட்ட வீரர் புகழாரம்!

Summary:

Rishap pant talk about msd

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவரது சிறந்த ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்தார். இந்திய அணியில் விக்கெட் கீப்பரிலும் சரி, பேட்டிங் செய்வதிலும் சரி, மரண ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்கு பின் எவ்வித போட்டிகளிலும் தல தோனி பங்கேற்கவில்லை.

தோனியின் இடத்துக்கு ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடத்தை நிரப்புவார் என பேசப்பட்ட ரிஷப் பன்ட், தற்போது தோனியை புகழ்ந்து கூறியுள்ளார். அவர் தனக்கு குரு என்று
ரிஷாப் பன்ட்  கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிரம் உரையாடலில்  அவர் கூறுகையில், இளைஞர்களுக்கு தோனியைப் போல உதவுபவர் வேறு யாருமே இருக்க முடியாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவரிடம் தீர்வு கிடைக்கும். இளைஞர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பையும், ஆதரவையும் கொடுப்பார் என ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் தோனி தான். ஆனாலும் நாங்கள் ஒன்றாக பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. விராட், ரோகித் என சீனியர் வீரர்களுடன் இணைந்து பேட்டிங் செய்யும் போது வெவ்வேறு அனுபவம் கிடைக்கின்றன என தெரிவித்தார். 


Advertisement