விளையாட்டு

ஒய்வு பெற்ற வீரர்களுக்கும் தற்போதைய இந்திய அணி வீரர்களுக்கும் போட்டி - இர்பான் பதான் யோசனை!

Summary:

Retired players vs current indian team for farewell

இந்திய கிரிக்கெட் அணியில் பல வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்த அனைத்து வீரர்களுக்கும் கடைசி போட்டி வைத்து சரியான வழியனுப்பு விழா நடைபெறவில்லை. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனிக்கு எந்தவித வழியனுப்பு விழாவும் நடக்கவில்லை.

இதனால் பலரும் தோனி மற்றும் இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு உழைத்த இன்னும் சில வீரர்களுக்காக ஒரு போட்டி வைத்து அவர்களை தகுந்த உபசரிப்புடன் வழியனுப்ப வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், ஓய்வுபெற்ற இந்திய அணி வீரர்கள் மற்றும் தற்போதைய இந்திய அணி வீரர்களுக்கு இடையே ஒரு போட்டி நடத்தி ஓய்வுபெற்ற வீரர்களை தகுந்த மரியாதையுடன் வழியனுப்பினால் நன்றாக இருக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற அணி வீரர்களின் 11 பேர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அணியில் கம்பீர், சேவாக், டிராவிட், லட்சுமணன், யுவராஜ், ரெய்னா, தோனி, இர்பான் பதான், அஜித் அகார்கர், ஷாகிர் கான் மற்றும் பிரக்யன் ஓஜா அகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.


Advertisement