விளையாட்டு Ipl 2019

அடித்து நொறுக்கிய சன்ரைசர்ஸ் அணி!. கொல்கத்தாவின் தோல்விக்கு இது தான் காரணம்!

Summary:

Reason for kkr losses


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 37 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. 38 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிவருகிறது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் லின் அதிரடியாக அடி 47 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நரேன் 8 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளனர்.


இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்த்த ரஸ்ஸல் 9 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து 2 சிக்ஸர் மட்டும் எடுத்து அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்கள் வரை அதிரடியாக ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர், பெயர்ஸ்டாவ் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். வார்னர் 38 பந்துகளுக்கு 67 ரன்கள் அடித்து அதிரடியாக ஆடி ராஜ் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதனையடுத்து சிறப்பாக ஆடிய பெயர்ஸ்டாவ் 43 பந்துகளுக்கு 80 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அதிகபடியான கேட்ச் மிஸ் செய்யப்பட்டதன் காரணமாகவே துவக்க வீரர்கள் அதிகப்படியான ரன்கள் எடுப்பதற்கு காரணமாக அமைந்தது. 


Advertisement