பெங்களூர் அணியின் பெயர் மற்றும் லோகோ மாறுகிறது..! புது பெயர் என்ன..? ஆர்வத்தில் ரசிகர்கள்.!

பெங்களூர் அணியின் பெயர் மற்றும் லோகோ மாறுகிறது..! புது பெயர் என்ன..? ஆர்வத்தில் ரசிகர்கள்.!


rcb-to-have-new-name-and-logo-in-ipl-2020-here-is-the-r

ஐபில் போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாதான். இந்நிலையில் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளை முன்னிட்டு இப்போதில் இருந்தே அணைத்து அணிகளும் கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகின்றன.

குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கப்பை வெல்லாத பெங்களூர், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இது மிகப்பெரிய கவுரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. அதில் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தலைமையில் இயங்கிவரும் பெங்களூர் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவருகிறது.

rcb

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை அந்த அணி மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. அணியின் லோகோவை டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிய அணி, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் இருந்து பெங்களூருவை தூக்கிவிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றியுள்ளது.

மேலும், அணியின் புது பெயர் மற்றும் மாற்றம் குறித்து வருகின்ற 16-ம் தேதி அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.