விளையாட்டு

வெறும் 20 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேபி.! பொங்கி எழுந்த ரசிகர்கள்.! ஆனால் உண்மை என்ன தெரியுமா.?

Summary:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சச்சின் பேபியை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு அதிகமாகவே இருந்தது. மேக்ஸ்வெல், மோரிஸ், ஜேமீசன், ஜை ரிச்சர்ட்சன் போன்றவர்கள் 10 கோடி ரூபாய்க்கு மேல் விலைபோயிருக்கின்றனர். 

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ரூ. 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லும், ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் எடுக்ககப்பட்டனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சச்சின் பேபியை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆனால் சச்சின் பேபியை பலரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்று தவறாக புரிந்து கொண்டு பெங்களூரு அணி நிர்வாகத்தை விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் உண்மையில் சச்சின் பேபி கேரளாவைச் சேர்ந்த 33 வயதாகும் கிரிக்கெட் வீரர் ஆவார். சச்சின் டெண்டுல்கரின் மகனின் பெயர் அர்ஜுன் டெண்டுல்கர்.


Advertisement