பேட்டிங்கில் இந்த வீரர் கோலியையும் மிஞ்சி விடுவார் - ஹைடன் கணிப்பு

பேட்டிங்கில் இந்த வீரர் கோலியையும் மிஞ்சி விடுவார் - ஹைடன் கணிப்பு


Rayudu and kuldeep are toppers against austraia

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியில் இந்தியாவின் சார்பில் அதிக ரன்களை அம்பத்தி ராயுடுவும் அதிக விக்கெட்டுகளை குல்தீப் யாதவுமே எடுப்பார் என ஹைடன் கணித்துள்ளார்.

cricket

எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முக்கிய பங்காற்றும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் நிச்சயம் உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பர்.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன் மற்றும் அதிக விக்கெட்டுக்களை எடுக்கும் பந்துவீச்சாளர் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன்.

இவரது கணிப்பின்படி பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் கோலியை மிஞ்சும் அளவிற்கு அம்பத்தி ராயுடு சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவிப்பார் என அவர் கனித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய ராயுடு இந்த தொடரிலும் தனது முழுத்திறமையை வெளிப்படுத்துவார் என கூறியுள்ளார்.

cricket

பந்துவீச்சை பொறுத்தவரை அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருக்கே அதிகம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுவார். அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பு இவருக்கே அதிகம் எனவும் ஹைடன் தெரிவித்துள்ளார்.