இன்றைய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த பிரபல வீரர்.!

இன்றைய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த பிரபல வீரர்.!



raveenthar beat sachin record

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 

இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்குமே இந்தப் போட்டி வாழ்வா சாவா என்ற நிலையில் மிகவும் எதிரபார்ப்புடன் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கான்வே 35 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில்லியம்சனும் ரச்சினும் சிறப்பாக விளையாடினார்கள். அசத்தலாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பத்திலேயே அதிரடியாக பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

sachin

இதனையடுத்து ஆட்டம் துவங்கியது. பாபர் அசாம் 66 ரன்களும்,  பாகார் சமன் 126 ரன்களும் எடுத்து அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதில் 108 ரன்களை அவர் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் மொத்தம் மூன்று சதங்களை அவர் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 

இதில் 25 வயதுக்குள் அதிக உலகக்கோப்பை சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் தகர்த்தார். சச்சின் 22 வயதில் 2 உலகக்கோப்பை சதங்களை அடித்திருந்த நிலையில், 23 வயதான ரச்சின் இன்று 3 வது உலகக்கோப்பை சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.