இந்தியா விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தில் நடந்த பரபரப்பு!! 2 பந்துக்கு 12 ரன் தேவை.. சிக்ஸர் பறக்கவிட்டு த்ரில் வெற்றிபெற்ற குஜராத்..

Summary:

நேற்றைய ஆட்டத்தில் நடந்த பரபரப்பு!! 2 பந்துக்கு 12 ரன் தேவை.. சிக்ஸர் பறக்கவிட்டு த்ரில் வெற்றிபெற்ற குஜராத்..

குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் கடைசி இரண்டு பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றிபெற்றது குஜராத் அணி.

ஐபில் 15 வது சீசன் முதல் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி வீரர் 27 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார்.

190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் மேத்யூவ் வேட் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து சுப்மன் கில் - அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 2வது விக்கெட்டிற்கு மட்டும் இந்த ஜோடி 101 ரன்களை சேர்த்தது.

சுப்மன் கில்  மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றனர். ஒருகட்டத்தில் சாய் சுதர்சன் 35 ரன்களுக்கும், சுப்மன் கில் 96 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

இதனை அடுத்து அதிரடியாக விளையாடி அணியின் கேப்டன் பாண்டியா ரன் அவுட் முறையில் வெளியேறினார். ஒருகட்டத்தில் கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்தால் குஜராத் அணி வெற்றிபெறலாம் என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார் குஜராத் அணி வீரர் திவாட்டியா.


Advertisement