கிரிக்கெட் ஆட்டத்தில் இனி பந்தில் எச்சிலை தேய்க்க தடை! கவலையுடன் பும்ராவின் குமுறல்!

கிரிக்கெட் ஆட்டத்தில் இனி பந்தில் எச்சிலை தேய்க்க தடை! கவலையுடன் பும்ராவின் குமுறல்!



pumra talk about new boowling method

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்துவிதமான விளையாட்டு போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது தற்போது, எத்தகைய விதிமுறைகளை பின்பற்றுவது என்பது குறித்து ஐ.சி.சி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.

கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது வீரர்களும், நடுவர்களும் களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எச்சில் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

cricket

இதுகுறித்து குறித்து இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா கூறுகையில், ஸ்விங் இல்லாத வேகப் பந்து வீச்சை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பந்தை பளபளப்பு ஆக்காமல் ஸ்விங் சாத்தியமே இல்லை. இதனால் எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்பது எனக்கு  கவலையைத் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

எச்சிலுக்கு பதிலாக மாற்று வழிமுறையை கண்டறிய வேண்டும். பந்தை நன்றாக பராமரிக்கவில்லை என்றால் அது பவுலர்களுக்கு கடினமாக அமையும். இல்லாவிட்டால் ஸ்விங் பவுலிங் சுத்தமாக அழிந்து போய் விடும். ஸ்விங் பவுலிங் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் சுவாரஸ்யமாக இருக்காது என பும்ரா தெரிவித்துள்ளார்.