விளையாட்டு

4 ஆவது போட்டிக்கான இந்திய உத்தேச அணி! கோலிக்கு பதில் யார்?

Summary:

Predicted india XI for 4th odi

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்று கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளிலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த 2 போட்டிகளிலும் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரோகித் சர்மா நிச்சயம் அணியில் இடம் பெறுவார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்த தொடரில் இதுவரை தவான் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. எனவே பழைய நிலையை எட்ட அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். தோனியின் காயம் சரியானால் தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் அவர் நிச்சயம் ஆடுவார். 

கோலியின் இடத்தை நிரப்ப அறிமுக வீரர் சுபம் கில் களமிறக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம். 2018ல் நடைபெற்ற U-19 உலககோப்பையில் சிறப்பாக ஆடிய இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோலி இவரைப் பற்றி கூறுகையில் 19 வயதில் கில் ஆடுவதில் 10 சதவிகிதம் கூட அந்த வயதில் நான் ஆடவில்லை என கூறியுள்ளார். 

மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வே இல்லாமல் ஆடி வரும் முகமது சமிக்கு ஓய்வளிக்கப்பட்டு முகமது சிராஜ் களமிறங்க வாய்ப்புள்ளது. சிராஜ் ஆஸ்திரேலியாவுடன் ஆடிய முதல் போட்டியிலேயே 76 ரன்கள் விட்டுகொடுத்தார். அவரது திறமையை சோதிக்க இதுவே நல்ல தருணம். 

11 பேர் கொண்ட உத்தேச அணி:
ரோகித் சர்மா(கே), தவான், சுபம் கில், அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஷ்வர், குல்தீப் யாதவ், சாகல், முகமது சிராஜ் 

    


Advertisement