ஒட்டுமொத்த இந்தியாவையும் உருகவைத்த பாகிஸ்தான் ரசிகர்!. அவர் கூறும் வியக்கவைக்கும் காரணம்!.

ஒட்டுமொத்த இந்தியாவையும் உருகவைத்த பாகிஸ்தான் ரசிகர்!. அவர் கூறும் வியக்கவைக்கும் காரணம்!.


pakisthan fan singing indian national anthem

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய தேசிய கீதத்தை பாடியது ஏன் என பாகிஸ்தான் ரசிகர் விளக்கமளித்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இரண்டு நாடுகளின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. நேற்று ஆட்டம் தொடங்கும் முன்  இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பாகிஸ்தான் ரசிகர் எழுந்து நின்று, இந்திய தேசிய கீதத்தை அவரும் சேர்ந்து பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. 

பாகிஸ்தானை சேர்ந்த அடில் தாஜ் எனும் அந்த ரசிகர் இந்திய தேசிய கீதத்தை பாடியபோது, தோளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை போர்த்தியவாறே இந்திய தேசிய கீதத்தை பாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அடில் தாஜ் இதுகுறித்து கூறுகையில், ‘எனது அருகில் இருந்த சில இந்திய ரசிகர்கள், எங்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செய்ததைப் பார்த்தேன். இதைத் தொடர்ந்து நானும் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினேன் என கூறினார்.