பாகிஸ்தான் - இலங்கை இடையேயான போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

பாகிஸ்தான் - இலங்கை இடையேயான போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!



Pakistan vs srilanka super 4 match started after delay 2 hours

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.

லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ளது. அதன்பின், இந்தியா-இலங்கை அணிகள் மோதிய போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதியானது. 

தற்போது, பாகிஸ்தான் - இலங்கைக்கு இடையேயான சூப்பர் -4 சுற்று போட்டி மழையின் காரணமாக தாமதமாகிறது. 2.30 மணிக்கு டாஸ் போட்டு 3 மணிக்கு போட்டியை தொடங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், தாமதம் நிலவியது. 

இதனை தொடர்ந்து, போட்டி தொடங்கியுள்ளது. இதில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. போட்டி தொடங்க இரண்டு மணி நேரம் தாமதம் ஆனதால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இன்று இந்த போட்டியில் எந்த முடிவும் இல்லை என்றால், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.