பெண் குழந்தைகளுக்கு பட்டப்பகலில் பாதுகாப்பு இல்லை! தெருவில் விளையாடிய பெண் குழந்தை! வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அத்துமீறய பாலியல் வன்கொடுமை! சிசிடிவி காட்சி...



pakistan-girl-harassment-viral-video

பாதுகாப்பற்ற சூழலில் சிறுவர்கள் தினசரி எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் நேரம் இது. பாகிஸ்தானின் கசூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், இதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது.

சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்

பாகிஸ்தானில் உள்ள கசூர் மாவட்டம் ஒன்றில், ஒரு பெண் குழந்தை தனது வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் அவரது இளைய சகோதரரும் விளையாடிக் கொண்டிருந்தார். குறித்த தெருவில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையிலும், இருவரும் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீர் தாக்குதல்

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு ஆண், திடீரென அந்த பெண் குழந்தையை கட்டாயமாகக் கட்டிப்பிடித்து, வாயில் முத்தம் கொடுத்துள்ளார். குழந்தை விடுவிக்கக் கோரியபோதும், அவர் தனது செயலை நிறுத்தாமல் அதேபடி நடந்துகொண்டார். பின்னர் எதுவும் நடக்காதது போல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். பயந்து போன குழந்தை சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடியார்.

இதையும் படிங்க: பார்க்கவே பதறுது.. பட்டப் பகலில் திட்டமிட்ட கொலை முயற்சி! வேகமாக வந்த கார்! ஸ்கூட்டியில் சென்ற முதியவர் மீது மோதல்! எழுந்து நின்றவரிடம் நொடியில் காண்பித்த கண்ணாமூச்சி ஆட்டம்! பதறவைக்கும் வீடியோ காட்சி....

சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

இந்த சம்பவம் வீட்டு அருகிலிருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள், பெண் குழந்தைகள் கூட பட்டப்பகலில் பாதுகாப்பில்லாமல் வாழும் நிலையை காட்டுகிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம், குழந்தைகள் மீது குற்றச்செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. பாதுகாப்பான சூழலை உருவாக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

இதையும் படிங்க: இப்படி பண்ணலாமா.... அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவு! பார்த்ததும் ஷாக்கான நோயாளி மற்றும் உறவினர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!