திடீர் ட்விஸ்ட்.... ஓப்பனாக மேயர் பதவி கேட்ட கயல்விழி..! உடனே செக் வைத்த முதல்வர் விஜய்! அரசியல் கணக்கை கேட்டு அதிர்ந்துப்போன கயல்விழி!!!



kayalvizhi-mayor-demand-tvk-joining-talks

மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், கட்சியில் இணைவதற்கு முன் அவர் வைத்ததாகக் கூறப்படும் மதுரை மேயர் பதவி தொடர்பான நிபந்தனை, பேச்சுவார்த்தையில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக பக்கம் நகர்ந்ததாக பேசப்பட்ட கயல்விழி

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திமுக தலைமையை கயல்விழி வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இதே நேரத்தில், மு.க. அழகிரியின் ஆதரவாளர்களில் சிலர் அதிமுக மற்றும் தவெக நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கயல்விழி பங்கேற்றதுடன், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியது, அவர் விரைவில் தவெகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இதையும் படிங்க: கெத்து காட்டும் ஸ்டாலின்! திமுக கூட்டணியில் ஒரே நேரத்தில் இணையும் இரண்டு கட்சிகள்.....! சூடுபிடிக்கும் அரசியல் களம்!

மேயர் பதவி கோரிக்கையால் திருப்பம்?

அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, கட்சியில் இணையும் பட்சத்தில் மதுரை மாநகராட்சி மேயர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கயல்விழி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. திமுக குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் தவெகவில் இணைவது கட்சிக்கு அரசியல் ரீதியாக பலம் சேர்க்கும் என்ற எண்ணத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டதாகவும், ஆனால் ஆரம்பத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தலைவர் விஜய்யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்கே பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், எந்தவித நிபந்தனையையும் ஏற்று யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டியதில்லை என்றும் விஜய் திட்டவட்டமாக தெரிவித்ததாக அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தை மந்தமானதாகவும், கயல்விழியின் இணைவு தற்போது உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மதுரையில் புதிய அரசியல் கணக்கு

மற்றொரு புறம், மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளர் மருதுபாண்டியனை எதிர்கால மேயர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியில் அவரது தரப்பு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், கயல்விழியின் மேயர் பதவி கோரிக்கையே அவரின் அரசியல் நகர்வுக்கு பின்னடைவாக மாறியிருக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் சி.விஜயபாஸ்கர்! அப்போ தவெக இல்லையா... இப்போ திமுகவா! அரசியலில் வெடிக்கப்போகும் பெரிய பூகம்பம்...!!!