அதிகாலை 2 மணிக்கு தாயிடம் கதறிய மகள்..! என்னை வந்து காப்பாத்துங்க! யாருன்னே தெரியல என்னை... தங்குமிடத்த்துக்கு போன போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி! நடுங்க வைக்கும் சம்பவம்..!!!!



guwahati-university-student-nimisha-thakuria-death

அஸ்ஸாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள ஹோம்ஸ்டேயில் குவஹாட்டி பல்கலைக்கழக மாணவி நிமிஷா தாகுரியா சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 2 மணிக்கு தனது தாயைத் தொடர்புகொண்ட மாணவி, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக கூறி உதவி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஆபத்தான நிலையில் கிடந்த மாணவியை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

அதிகாலை தாயிடம் உதவி கேட்ட மாணவி

சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் நிமிஷா தனது தாயாருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அழுதபடியே பேசிய அவர், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாக கூறி உதவி கேட்டதாக தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உன்ன மாறி ஆளையெல்லாம் சும்மா விடக்கூடாதுடா..! ரயில் நிலையத்தில் பெண்ணை பார்த்து அந்தரங்க உறுப்பை பிடித்து ஆபாசச் சைகை செய்த வாலிபர்! இறுதியில் பெண் கொடுத்த தரமான பதிலடி....!!!

ஹோம்ஸ்டேயில் ஆபத்தான நிலையில் மீட்பு

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பந்தப்பட்ட ஹோம்ஸ்டேக்கு விரைந்து சென்றனர். அங்கு நிமிஷா சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், மாணவி உயிரிழந்தது தெரியவந்தது.

ஒருவர் கைது; பல்வேறு கோணங்களில் விசாரணை

மாணவியின் மரணம் தொடர்பாக அலி என அடையாளம் காணப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தாக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது மரணத்துக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் தொடர்பான ஆதாரங்கள், தொடர்புடைய நபர்களின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: வாழ்ந்தா இவன் கூட தான் வாழ்வேன்...! நமக்கு வளர்ந்த 2 பிள்ளைகள் இருக்காங்க... அவுங்களுக்காக வா! கண்ணீர் விட்டு கெஞ்சிய கணவர்... வாலிபரை கட்டிப்பிடித்து வர மறுத்த மனைவி! பரபரப்பு சம்பவம்...!!!