புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இந்திய அணியின் கேப்டனுக்கு வாழ்த்து கூறிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி தற்போது T20 போட்டிகளில் விளையாடிவருகிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 72 ரன்களை குவித்து ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் 72 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச அளவிலான 20 ஓவர் போட்டிகளில், அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இருந்து ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி விராட்கோலி முதல் இடத்தை தட்டிச்சென்றார்.
அதுமட்டும் இல்லாமல் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் 22 அரைசதங்களை கடந்து சர்வதேச அளவில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் விராட்கோலி.
மேலும் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய மூன்று வகையான போட்டிகளிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரியை வைத்துள்ள வீரர் என்ற பெருமையும் விராட்கோலிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் விராட்கோலியின் இந்த சாதனைக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன்னர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது வாழ்த்துக்களை விராட்கோலிக்கு தெரிவித்துள்ளார். அதில் விராட் கோலி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் எனவும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.