விளையாட்டு

கழுத்தை அறுத்துவிடுவேன்! பாகிஸ்தான் பந்துவீச்சாளரின் ஆக்ரோஷ செயல்! வைரல் வீடியோ!

Summary:

pakistan bowler getting emmotion


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியான பிக் பாஸ் லீக்கில் வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை தேசிய அணியில் தேர்வு செய்யப்படாத பாகிஸ்தானை சேர்ந்த ஹரிஸ் ரவூப், மூன்று போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலபோர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் 26 வயதான ஹரிஸ், விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் தனது கழுத்தில் கைவைத்து, 'கழுத்தை அறுத்து விடுவேன்' என்ற செய்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் நேற்று சிட்னி தண்டருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விக்கெட் எடுத்த பின்னர் சர்ச்சையான செய்கையில் ஹரிஸ் ஈடுபட்டிருந்துள்ளார். இந்த வீடியோவானாது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Advertisement