விளையாட்டு

இது தான் எனது கடைசி போட்டி.! இந்தியாவை எப்படியாவது ஜெயிச்சடனும்.! நியூசிலாந்து வீரர் ஓப்பன் டாக்.!

Summary:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ட

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணி வீரர் பிஜெ வாட்லிங் கூறுகையில், காயத்திலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரனாக காயம் அடைவது எதார்த்தமான ஒன்றுதான். ஆனால் இதுபோன்ற சமயத்தில் அதில் இருந்து சீக்கிரமாக குணமாகி வந்தது ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். இந்த இறுதிப் போட்டியானது, ஐசிசி கோப்பையை கைப்பற்ற எங்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இது என்னுடைய கடைசி சர்வதேச போட்டி என்பதால், வெற்றியுடன் ஓய்வு பெற நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement