உலகம் விளையாட்டு

ஓரினச்சேர்க்கையாளரை மணந்த பிரபல கிரிக்கெட் வீரங்கனை! கர்ப்பமானது எப்படி?

Summary:

New Zealand cricketer Amy Satterthwaite pregnant

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி அமெ சட்டர்த்வெய்ட், நியூசிலாந்து அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடி உள்ளார். பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய ஒரே வீராங்கனை இவர் தான்.

சட்டர்த்வெய்ட், தனது அணியின் சக வீராங்கனையும், வேகப்பந்து வீச்சாளருமான 28 வயதான லியா தாஹூஹூவுடன் நெருங்கிப் பழகினார். பின்னர் ஒன்றாக வசித்து வந்த இவர்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.


 


இந்த நிலையில் சட்டர்த்வெய்ட் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு. ஆனால் சக வீராங்கனையை கரம்பிடித்த சட்டர்த்வெய்ட் எந்த முறையில் கர்ப்பம் ஆனார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.


 


Advertisement