"துருவ நட்சத்திரம் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமா?! குழப்பத்தில் ரசிகர்கள்..
அட.. நம்ம சேலத்து நடராஜனா இது.! ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பின் எப்படி மாறிட்டாரு பார்த்தீர்களா.? வேற லெவல் புகைப்படம்.!
அட.. நம்ம சேலத்து நடராஜனா இது.! ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பின் எப்படி மாறிட்டாரு பார்த்தீர்களா.? வேற லெவல் புகைப்படம்.!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் T 20 தொடரை கைப்பற்றியது.
இந்திய அணியில் சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் சேலத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். அவர் களமிறங்கிய அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார்.
"Sydney"fied 🇦🇺 pic.twitter.com/qw4zQcfyMj
— Natarajan (@Natarajan_91) December 10, 2020
அதன்பின் நடந்த இரண்டு டி 20 போட்டியில் 2 மற்றும் 1 விக்கெட் என்று அசத்தி வருகிறார். ஆஸ்திரேலிய வீரர்களும் நடராஜனின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பவதற்க்கே யோசிக்கின்றனர். அதற்க்கு காரணம் அவர் வீசும் சாமர்த்தியமான யார்க்கர் தான்.
இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது தோற்றத்தை மாற்றி புதுப்பொலிவுடன் காணப்படுகிறார். தற்போது நடராஜன் மிக ஸ்டைலாக மாறியுள்ளார். இவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.