தமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.! வைரலாகும் வீடியோ.!

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் நடராஜன் வீழ்த்திய வீடியோ வைரலாகி வருகிறது.


natarajan-got-first-wicket-video

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் நடராஜன் வீழ்த்தி பலரிடமும் பாராட்டை பெற்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 303-ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மார்னஸ் லபுஸ்சேன் இந்திய அணியின் நடராஜன் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் நடராஜன். 

போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தநிலையில் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் அவர் வீழ்த்திய முதல் விக்கெட்டின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.