இந்தியா விளையாட்டு

யுவராஜ் சிங்கை வாங்கிய ஆகாஷ் அம்பானியின் நெகிழ வைக்கும் காரணங்கள்.!

Summary:

mumbai indians team - akash ambani - yuvraj

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பைக்கான போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் தரும் பேராதரவுடன் 2008ஆம் ஆண்டு தொடங்கிய இப்போட்டியின் 12 சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தேவையான வீரர்கள் நேற்று ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியில் ஒரு காலகட்டத்தில் முன்னணி வீரராக ஜொலித்த யுவராஜ் சிங்க் பெயரும் பட்டியலில் இடம்பெற்றது. இந்திய அணி பல்வேறு கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் முதல் சுற்று ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது.

Image result for yuvraj singh ipl 2019

இந்நிலையில் இரண்டாவது சுற்று ஏலத்தில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகையான ஒரு கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அவரை வாங்கினார்.

இதுகுறித்து ஆகாஷ் அம்பானி கூறும்போது: யுவராஜ் சிங், மலிங்கா போன்ற மிகச்சிறந்த வீரர்கள் எங்களின் மும்பை இந்தியன் அணிக்கு கிடைத்தது மிக மகிழ்ச்சியான விஷயம். உண்மையில் யுவராஜ் சிங் போன்ற பெரிய, சிறந்த வீரருக்கு வெறும் ரூ. 1கோடி மட்டும் கொடுத்து எடுத்தது வறுத்தம் தான். 

Image result for yuvraj singh ipl 2019

மொத்தம் 7 வீரர்கள் எடுக்க வேண்டி இருந்ததால் நாங்கள் முதல் முறை ஏலம் விடும் போது எடுக்க வில்லை. அதன் பின் மீண்டும் ஏலத்திற்கு யுவராஜ் சிங் வரும் போது அவரை வாங்கியே ஆக வேண்டும் என தீர்மானித்தோம். 

உண்மையில் கடந்த 12 வருடங்களில் அவர் பல கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்துள்ளார். நாங்கள் அவரை வாங்கியதன் மூலம் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததாக கூறுவது தவறு. எங்கள் அணிக்கு எப்போது யுவராஜ் சிங் போன்ற வீரர் தேவை என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 


 


Advertisement