11 வருட ஐபில் சாதனையை முதல் ஆட்டத்திலையே உடைத்து எறிந்த மும்பை வீரர்! குவியும் வாழ்த்து.!

11 வருட ஐபில் சாதனையை முதல் ஆட்டத்திலையே உடைத்து எறிந்த மும்பை வீரர்! குவியும் வாழ்த்து.!


mumbai-indians-alzarri-joseph-break-the-record-after-12

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 19 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து சென்னை அணி வெற்றிபெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் கைதராபாத் அணியை 96 ஓட்டங்களில் மடக்கி மும்பை அணி வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 136 ரன் எடுத்தது. 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்து தனது விக்கட்டுகளை இழந்து இறுதியில் 96 ஓட்டங்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

IPL 2019

இந்த ஆட்டத்தில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மும்பை அணியின் அல்சாரி ஜோசப் வெறும் 12 ரன் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அல்சாரி ஜோசப் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். தனது முதல் ஆட்டத்திலையே அல்சாரி ஜோசப் இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2019

இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் சொகைல் தன்வீர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார் அல்சாரி ஜோசப்.