இந்த பெருந்தன்மை தான் தல தோனி.! வெற்றிக்கு பிறகு தோனி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

இந்த பெருந்தன்மை தான் தல தோனி.! வெற்றிக்கு பிறகு தோனி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!


ms-dhoni-talk-about-finale-VJZVXM

ஐ.பி.எல். 2021 கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

 நேற்றைய ஆட்டத்தின் வெற்றிக்கு பின்னர் தோனி பேசுகையில், சிஎஸ்கேவை பற்றி பேச ஆரம்பிக்கும் முன்பாக நான் கொல்கத்தாவைப் பற்றி பேச விரும்புகிறேன். ஐபிஎல் கோப்பையை வெல்ல ஏதாவது அணிக்கு தகுதி இருக்கிறது என்றால் அது கொல்கத்தா அணிக்குத்தான். அந்த அணியின் பயிற்சியாளர்கள், உதவிப்பணியாளர்களுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும்.

சிஎஸ்கேவைப் பொறுத்த வரையில், மேட்ச் வின்னர்கள் ஒவ்வொரு ஆட்டமும் வந்து கொண்டே இருந்தனர், நன்றாக ஆடினர். புள்ளி விவரங்களை பார்த்தால் நாங்கள்தான் சீராக இறுதிப் போட்டியில் தோற்கும் அணியாக இருந்திருக்கிறோம். எங்கள் பயிற்சி அமர்வுகள் சிறப்பாக அமைந்தன. சென்னையில் ஆடுவது போலவே உணர்ந்தேன், ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.