தீயா வேலை செய்யணும் குமாரு... T20 உலகக் கோப்பைக்கு அடுத்த தோனி வந்துட்டாரு..! பயிற்சி கொடுக்குறது யாருனு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ



ms dhoni practice to rishap pant

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர் தோனி மைதானத்தில் வைத்து ரிஷப் பண்டிற்கு கீப்பிங் பயிற்சி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

T20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இதுவரை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டுக்கு கீப்பிங் பயிற்சி கொடுத்துள்ளார் தோனி. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்க்கு முன்னதாக டி20 உலகக் கொய்ப்பையை இந்தியா வெல்ல உதவியவர் அப்போதைய இந்திய கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.