வாத்தி கம்மிங்...! மீண்டும் இந்திய அணியில் தல தோனி.! படுகுஷியில் ரசிகர்கள்!

வாத்தி கம்மிங்...! மீண்டும் இந்திய அணியில் தல தோனி.! படுகுஷியில் ரசிகர்கள்!


Ms dhoni mentor for indian team

டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

 இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியும் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ்,ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த நிலையில், இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளது இந்திய அணிக்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.