மைதானத்திற்குள் தோனியை துரத்திய ரசிகர்!! ஓட்டம் பிடித்த தோனி!! வைரலாகும் வீடியோ!!

மைதானத்திற்குள் தோனியை துரத்திய ரசிகர்!! ஓட்டம் பிடித்த தோனி!! வைரலாகும் வீடியோ!!


ms-dhoni-done-for-his-fan

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய அணி களமிறங்கி விளையாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி தான் சந்தித்த 120 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 40 ஆவது ஒருநாள் சதம் ஆகும்.

இந்தநிலையில் இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 

MS Dhoni

இந்தநிலையில், இந்திய வீரர்கள் பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் வந்தனர். அப்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் பல தடுப்புகளையும் மீறி இந்திய வீரர்களிடம் ஓடிவந்துள்ளார். அந்த ரசிகர் தோனியிடம் சென்றபோது தோனி ஓட்டம்பிடிக்க ஆரம்பித்து, அவருடன் ஓடி பிடித்து விளையாண்டுள்ளார். 

இறுதியில் ரசிகனின் ஏக்கத்தை பார்த்த தோனி அவரை கட்டியணைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.