தல தோனியுடன் சர்ப்ராஜை ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட ஐசிசி-யை கழுவி ஊத்தும் ரசிகர்கள்.!

தல தோனியுடன் சர்ப்ராஜை ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட ஐசிசி-யை கழுவி ஊத்தும் ரசிகர்கள்.!



m.s dhoni - sarfraj catch video release icc - fans comments

இந்திய அணியில் ஆரம்பகாலத்தில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் நிரந்தர இடத்தை பிடித்தவர் தல தோனி. மிகக் குறுகிய காலத்திலேயே இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

பேட்டிங் மட்டுமின்றி கீப்பிங்கிலும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங், துரிதமான ரன் அவுட், டைவிங் கேட்ச் என அசாத்திய திறமையை தன்னகத்தே கொண்டுள்ளார். 



 

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜ் அஹமது, ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதே போல மிரட்டலான ஒரு கையால் கேட்ச் பிடித்து மிரட்டினார்.



 

இந்த இரண்டு கேட்ச்களை ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட ஐசிசி., யார் சிறப்பாக கேட்ச் பிடித்தது என கேள்வி எழுப்பியது. இதைப்பார்த்த இந்திய ரசிகர்கள், தோனியின் ஒவ்வொரு அசைவையும் பிரேம் பை பிரேமாக எடுத்து, எது சிறந்த கேட்ச் என தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். 



 

தவிர, மேலும் சில ரசிகர்கள், தோனி தான் சிறப்பாக பறந்து கேட்ச் பிடித்ததாகவும், சர்ப்ராஜ் கால்கள் தரையில் தான் உள்ளதாகவும், அதனால் இருவரில் பந்தை சிற்ப்பாக கேட்ச் பிடித்தது தோனி தான் என தெரிவித்துள்ளனர். மேலும் சில ரசிகர்கள் எவ்வளவு முயன்றாலும் தோனி கால் தூசிக்கு கூட சர்ப்ராஜ் வரமுடியாது என தோனியுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட ஐசிசி.,யை கழுவி ஊற்றி வருகின்றனர்.