விளையாட்டு

சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து இதை நீக்குங்க!! சிஎஸ்கே வீரர் கேட்ட உடனே ஓகே சொன்ன சென்னை அணி!! என்ன காரணம் தெரியுமா?

Summary:

சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து மதுபான விளம்பரத்தை நீக்கவேண்டும் என சிஎஸ்கே வீரர் மொயின் அலி வி

சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து மதுபான விளம்பரத்தை நீக்கவேண்டும் என சிஎஸ்கே வீரர் மொயின் அலி விடுத்த கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து அணி வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை அணியும் பல வாரங்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. மேலும் 10 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாடுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டரான மொயின் அலியை ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள மொயின் அலி சென்னை அணி நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, தான் ஒரு இஸ்லாமியர் என்பதால் மது தொடர்பான எந்த விளம்பரமும் தன்னுடைய ஜெர்சியில் இடம் பெற வேண்டாம் என்றும், சென்னை அணியின் ஜெர்சியில் உள்ள மதுபான விளம்பர சின்னத்தை நீக்கிவிடும்படியாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை அணி நிர்வாகம், மொயின் அலியின் உணர்வுக்கு மதிப்பு தருவதாக கூறி, சென்னை அணி மொயின் அலியின் ஜெர்சியில் இருந்து குறிப்பிட்ட மதுபான விளம்பரத்தை நீக்க முடிவு செய்துள்ளது.


Advertisement