கடைசி 6 பந்தில் 11 ரன் தேவை!! களத்தில் நின்றது யார் தெரியுமா?? இப்படி ஒரு கடைசி ஓவரை உங்க வாழ்க்கையில பாத்துருக்க மாட்டீங்க!!

கடைசி 6 பந்தில் 11 ரன் தேவை!! களத்தில் நின்றது யார் தெரியுமா?? இப்படி ஒரு கடைசி ஓவரை உங்க வாழ்க்கையில பாத்துருக்க மாட்டீங்க!!



Mitchell starc final over against to andre russell

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 4 வது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றிபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்த மூன்று T20 போட்டிகளிலும் வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 75 ரன்களும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 53 ரன்களும் எடுத்தனர்.

190 என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். ஆனால் கடைசி ஓவரில் 6 பந்துக்கு 11 ரன்கள் தேவை என்றநிலையில் கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீச வந்தார்.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான ரஸ்ஸல் அந்த ஓவரை எதிர்கொண்டார்.

6 பந்துகளில் 11 ரன்களை ரஸ்ஸல் எளிதாக எடுத்துவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தநிலையில், மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் நான்கு பந்துகளில் ரசலால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் 1 சிக்ஸ்ர் அடித்தநிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.