விளையாட்டு

அவர் அதற்கு லாயக்கில்லை.. மீண்டும் ஜடேஜாவை வம்பிழுக்கும் மஞ்சுரேக்கர்!

Summary:

ரவீந்திர ஜடேஜா குறித்து மீண்டும் கருத்து கூறி சிக்கலில் மாட்டியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிசிசிஐ வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர், டி20 போட்டிக்கு ஜடேஜா லாயக்கில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதில், "ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிக்கு லாயக்கில்லை, அவருக்கு பதிலாக அக்சர் படேலை தேர்வு செய்யலாமே. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மஞ்சுரேக்கர், "நான் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக" கூறியுள்ளார்.


ஏற்கனவே கடந்த 2019 ஆம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது ஜடேஜாவை பற்றி கருத்து கூறி சிக்கலில் மாட்டினார் மஞ்சுரேக்கர். இதனால் அவரது வர்ணனையாளர் பதவி பறிபோனது. ஜடேஜாவும் நல்ல பதிலடி கொடுத்தார். தற்போது மீண்டும் ஜடேஜாவை இழிவுபடுத்தும் விதமாக பதிலளித்துள்ளதால் இதற்கும் சேர்த்து நன்றாக வாங்க போகிறார் என்று தோன்றுகிறது.


Advertisement