விளையாட்டு

பெங்களூரு அணியின் வெற்றிக்கு ஏபிடி காரணமாக இருந்தாலும், இந்த பவுலர் இல்லைனா மொத்த சோலியும் முடிஞ்சுருக்கும்.!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. முதல்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 49 ரன்களை எடுத்திருந்தார். முன்பை அணியில், மிடில் ஆர்டரில் அதிரடி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் இருந்தனர்.

இதனால் மும்பை அணி எப்படியும் 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேல் அற்புதமாக பந்துவீசி ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்ட்யா,இஷான் கிஷன், குர்ணால், பொல்லார்ட், ஜேன்சென் ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

     

ஹர்ஷல் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கியது பெங்களூரு அணி. அந்த அணியில் நிதானமாக ஆடிய விராட் கோலி 33 ரன்களுக்கும், அதன்பின் மேக்ஸ்வெல் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பாக ஆடிய  ஏபிடி வில்லியர்ஸ் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்கள் வரை ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியை முதல் ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ஹர்ஷல் பட்டேலின் சிறப்பான பந்து வீச்சே பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Advertisement