நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தோல்வி.! ஆனாலும் அந்த அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!



luck for RCB in yesterday match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி  கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தின் வெற்றியால் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக உள்ளே சென்றுள்ளது.

rcb

இந்தநிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதுகிறது. டெல்லியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியும் பிளே-ஆப்  சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதாவது 17.3 ஓவருக்குள் டெல்லி அணி இலக்கை எட்டியிருந்தால் ரன்ரேட்டில் பெங்களூரு அணி, கொல்கத்தாவுக்கு கீழ் சென்றிருக்கும். 

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 19-வது ஓவரில் தான் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. இதனால் ரன்ரேட்டில் கொல்கத்தாவை விட பெங்களூரு அணி முந்தியே உள்ளது.